அதிராம்பட்டினத்தில் முஸ்லிம் ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் தொடங்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அதிராம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், அவர்கள் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இயக்கக் கட்சியினரின் கைது நடவடிக்கையை எதிர்த்து, பேருந்து நிலையம் அருகே அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் அளித்த புகாரில், ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் 304 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி சுந்தர்மோகன் மனுவை பரிசீலித்து, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைவரின் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.