சீமான் 59வது பிறந்தநாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து – தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அவரது வீட்டுக்கு வந்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
விருந்துக்கு சிறப்பு ஏற்பாடாக, 13 வகையான அசைவ உணவுகள் — மீன் வறுவல், நல்லி எலும்பு குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் பக்கோடா உள்ளிட்டவை — மற்றும் 9 வகையான சைவ உணவுகள் — சாம்பார், ரசம், வடை, பாயாசம், பொறியல் உள்ளிட்டவை — பரிமாறப்பட்டன.
இதற்கிடையில், பல அரசியல் கட்சித் தலைவர்களும் சீமான் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில்,
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து தெரிவித்தனர்.