அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ நவ.21-ல் ரிலீஸ்
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகிறது.
ஜி.எஸ் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக நவம்பர் 21 தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் விளம்பரப் பிரச்சாரமும் துவங்கவுள்ளது.
தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா ஆகியோர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம், நியாயத்தை தாண்டி தர்மம்; ஆனால் இறுதியில் தர்மமே வெற்றி பெறும் என்பதே கதையின் மையக் கருத்து.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளர் பரத் ஆசிவகன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகும் என படக்குழு முடிவு செய்துள்ளது.