ஐபிஎல் 2026 சீசனில் தோனி ஆடுகிறார் – சிஎஸ்கே அதிகாரப்பூர்வ உறுதி
வரும் 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குவார் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் அதன் பிரதான முகமாக விளங்கும் தோனி என்ற பெயர் ஒன்றோடொன்று இணைந்தவை. 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தோனி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்கும் முன்பே “தோனி இன்னும் ஒரு சீசனுக்கு விளையாடுவாரா?” என்ற கேள்வி எழுவது வழக்கம். இந்நிலையில், 44 வயதான தோனி 2026 ஐபிஎல் சீசனிலும் ஆடுவது உறுதியாகியுள்ளது. “அடுத்த சீசனிலும் நான் இருப்பேன்” என்று தோனி தாமே தெரிவித்துள்ளதாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டு முதல் சீசனிலிருந்து தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் (அணி தடை செய்யப்பட்ட இரண்டு சீசன்களைத் தவிர). இதனால், வரவிருக்கும் சீசன் தோனிக்கான 19வது மற்றும் சிஎஸ்கே அணிக்கான 17வது சீசனாகும். கடந்த சீசனில் தோனி Uncapped வீரராக ஆடினார்; அப்போது சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றது.
இந்நிலையில், அடுத்த சீசனுக்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டு வருகிறது. இதற்காக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மேலும், டிரேடிங் முறையின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வீரர்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரலாம் என்ற தகவலும் பரவியுள்ளது.