கடலூரில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27வது வைணவ மாநாடு

Date:

கடலூரில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27வது வைணவ மாநாடு

ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது வைணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டை முன்னிட்டு கருட கொடியை கோ. லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்தார். அதன் பின் அரவிந்தன் சுவாமி “திருமால் வணக்கம்” பாடினார்.

சபா தலைவர் சே. ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்புரையாற்றினார்; பொருளாளர் பி.எஸ். வெங்கடேசன் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

மாநாட்டில் திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்து மங்களாசாசனம் வழங்கினார்.

இதையடுத்து பலர் ஆன்மிக சொற்பொழிவுகள் வழங்கினர்:

  • ஆகமத்தில் ஆனந்தன்’ – திருச்சி ஸ்ரீரங்கம் ராமன் பட்டாச்சாரியார் ஸ்வாமி
  • திருநாம வைபவம்’ – திருவல்லிக்கேணி ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி
  • கள்ளனும் குள்ளனும்’ – தூத்துக்குடி சடஜித் சுவாமி
  • வைஷ்ணவ லட்சணம்’ – ஸ்ரீரங்கம் உ.வே. ஸாரதி தோத்தாரி ஸ்வாமி
  • கொண்டாட்டம்’ – ஸ்ரீரங்கம் உ.வே. வகுளாபரணன் ஸ்வாமி

நிகழ்வை வளவதுரையன் ஒருங்கிணைத்தார்.

இறுதியாக சபா செயலாளர் இரா. இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஏராளமான வைஷ்ணவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமான் 59வது பிறந்தநாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து – தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள்

சீமான் 59வது பிறந்தநாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து...

தென் ஆப்பிரிக்காவை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

தென் ஆப்பிரிக்காவை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது...

அதிவேக 50 மில்லியன் பார்வைகள் — ராம்சரண் ‘பெட்டி’ படத்தின் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் புதிய சாதனை!

அதிவேக 50 மில்லியன் பார்வைகள் — ராம்சரண் ‘பெட்டி’ படத்தின் ‘சிக்கிரி...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு – வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு – வெள்ளி விலையில் மாற்றமில்லை சென்னை:...