தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இல.பிரபு தெரிவித்ததாவது:
“ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் உள்ளிட்ட 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள்.
அனைத்து அரசு துறைகளிலும் தோற்றுவிக்கும் பணியாளர்கள் இடையே ஊதிய முரண்பாடுகள் இல்லை, ஆனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தில் மட்டும் ஒரே பணி, ஒரே கல்வித் தகுதியில் இருந்தும் வெவ்வேறு தொகுப்பூதியம் வழங்கப்படுவதாகப் பிரச்னை உள்ளது.
“இந்த முரண்பாடுகளை சரிசெய்ய மாநில திட்ட இயக்குநரிடம் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர், துணை முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் துறை செயலர் அனைவருக்கும் மனு அனுப்பப்பட்டும் முடிவெடுக்கப்படவில்லை.
எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, தொகுப்பூதிய பணியாளர்களிடையே நிலவும் முரண்பாடுகளை களைத்து, அவர்களுக்கு உயர்ந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறியுள்ளார்.