ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு – லபுஷேன் மீண்டும் சேர்ப்பு

Date:

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு – லபுஷேன் மீண்டும் சேர்ப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 21 அன்று பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் முக்கியமான மாற்றமாக, முன்னணி பேட்ஸ்மேன் மார்னஷ் லபுஷேன் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தால் அவர் நீக்கப்பட்டிருந்தார். ஆனால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அவர் மீண்டும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும், 31 வயதான தொடக்க வீரர் ஜேக் வெதரால்ட் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் ஷெப்ஃபீல்ட் ஷீல்டு தொடரில் 50.33 சராசரியுடன் 906 ரன்கள் எடுத்திருந்ததோடு, இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக சதமும் அடித்திருந்தார்.

காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் அணியில் இல்லை என்பதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், மேட் ரென்ஷா மற்றும் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், சீன் அபோட், மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் டாகெட் அறிமுக வீரர் ஆவார். பியூ வெப்ஸ்டர் மற்றும் கேமரூன் கிரீன் ஆல்ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், பிரெண்டன் டாகெட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகின் 29 நாடுகளுக்கான தூதர்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு

உலகின் 29 நாடுகளுக்கான தூதர்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு உலகின் பல்வேறு...

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு – பிரியங்கா காந்திக்கு ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு – பிரியங்கா காந்திக்கு ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்குள்...

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு – “யாராலும் காப்பாற்ற முடியாது” பகிரங்க மிரட்டல்

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு – “யாராலும் காப்பாற்ற முடியாது” என...