இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ராகுல் காந்தி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் – நாராயணன் திருப்பதி
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்:
“இந்தியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆனால், மக்களின் விழிப்புணர்ச்சியால் அவரது இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைந்தவையாக மாறி வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகள் வெறும் புலம்பல்களாகவே தோன்றுகின்றன. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் அவரை கடுமையான விரக்தியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. அதுவே அவரின் ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற கருத்துகளில் வெளிப்படுகிறது.
ராகுல் காந்தி தற்போது முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும். ஹரியானா தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாகவும் ஜனநாயக ரீதியிலும் நடத்தியது என்பது உண்மை.
- ஹரியானா தேர்தல் 05.10.2024 அன்று நடைபெற்றது.
- 02.08.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
- 4,16,408 மனுக்கள் மற்றும் எதிர்ப்புகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டன.
- அவை பரிசீலிக்கப்பட்டு, இறுதி பட்டியல் 27.08.2024 அன்று வெளியிடப்பட்டது.
- இதற்கு பின்னர் எந்த கட்சியும் மேல்முறையீடு செய்யவில்லை.
- 16.09.2024 அன்று வேட்பாளர்களுக்கு இறுதி பட்டியல் வழங்கப்பட்டது.
- மாநிலம் முழுவதும் 86,790 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- தேர்தலுக்குப் பின் எந்த வேட்பாளரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- வாக்கு எண்ணிக்கைக்காக 10,180 முகவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- 08.10.2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
- சட்டபூர்வமாக 23 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இப்படி அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடந்திருந்தும், ஒரு வருடம் கழித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் முன்வைப்பது அவரின் அறியாமையையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று கூறலாம்.
தனது கட்சி வெற்றிபெற முடியாத காரணத்தால், விரக்தியால் இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையம் பலமுறை சட்டப்படி புகார் அளிக்குமாறு கூறியும், அவர் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக அரசியல்ச் சோகம் வெளிப்படுத்துகிறார்.
ஆனால் மக்களின் நம்பிக்கை இந்திய ஜனநாயகத்தின் பலமாக உள்ளது. பீகார் தேர்தலிலும் ராகுல் காந்தியின் சதித்திட்டங்கள் தோல்வியடையும்; காங்கிரஸ் கட்சி முற்றிலும் சிதைந்துவிடும். ஜனநாயகம் வெற்றிபெறும் — காலமே காங்கிரசுக்கு விடை அளிக்கும்,” என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.