சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் நுழைவு மறுப்பு
சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இந்த பக்தர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா மற்றும் பயண ஆவணங்களை வழங்கியது. இதில் சுமார் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தானில் நுழைந்தனர்.
இது, கடந்த மே மாதம் “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே நடந்த முதல் மக்கள் தொடர்பு நிகழ்வாக அமைந்தது.
ஆனால், அனுமதி பெற்றவர்களில் 14 பேர் சீக்கியர்கள் அல்ல என்பதால், அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
மேலும், தனியாக விசாவிற்கு விண்ணப்பித்த சுமார் 300 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாததால், அவர்களுக்கும் நுழைவு மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.