ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’: நவம்பர் 15-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து இயக்கி வரும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் முதல் லுக் (First Look) நவம்பர் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்காக சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் படக்குழுவினர் மட்டுமே பங்கேற்க, நேரடி ஒளிபரப்பு உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.
‘வாரணாசி’ என்ற தலைப்பின் உரிமை முன்பே வேறு ஒருவரிடம் இருந்ததாகவும், தற்போது அந்த உரிமையையும் ராஜமவுலி படக்குழு பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் தலைப்பு ‘வாரணாசி’ என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒன்றாகும். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது.