தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Date:

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசு கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த புதிய மினி பஸ் திட்டம் அறிவித்துள்ளது. 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, புதிய மினி பஸ் திட்டம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

மேலும், தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமன்சந்தன் கெளடா விசாரித்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், 1,350 பேருந்துகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதாகவும், 500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிடுவதை பதிவு செய்து, மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதால் விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர்...

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் நேரடி நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் நேரடி நியமனத்திற்கு இடைக்கால தடை:...

‘ஆரோமலே’ படத்திற்கு சிம்பு சொன்ன மாற்றம்!

‘ஆரோமலே’ படத்திற்கு சிம்பு சொன்ன மாற்றம்! கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ்...

“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி உரை

“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில்...