சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தயாரிப்பு அறிவிப்பு
கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
- ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் இணைகிறது.
- கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “‘காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!’ – ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
- சுந்தர்.சி – ரஜினிகாந்த் கூட்டணியில் 1997ல் உருவான ‘அருணாச்சலம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது.