நடராஜருக்கு வைரம் பதிக்கப்பட்ட தங்க குஞ்சிதபாதம் – பக்தர் ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கினார்
சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளிநாடு முதல் உள்ளூர் வரை வந்து வழிபடுகின்றனர். இங்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் இடது காலையை உயர்த்திய நிலையில் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக அற்புத திருவருளில் உள்ளார்.
நடராஜரின் அந்த உயர்த்திய திருவடியில் பொருத்தும் வகையில், ஒரு பக்தர் ரூ.10 லட்சம் மதிப்புடைய வைரம் பதிக்கப்பட்ட தங்க குஞ்சிதபாதத்தை அர்ச்சனை பொருளாக சமர்ப்பித்துள்ளார்.
இந்த புனித தானப் பொருள், கட்டளை தீட்சிதரான சம்பந்த தீட்சிதரிடம் பூஜிக்கப்பட்டு, கோயில் கமிட்டி செயலாளர் த. சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவடியில் அணிவிக்கப் பட்டது.