இந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் இந்துஜா மறைவு
இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தொழில் துறையில் முக்கிய இடத்தை வகித்த இந்துஜா குழுமத்தின் மூத்த தலைவர் ஸ்ரீசந்த் இந்துஜா 2023 மே மாதத்தில் காலமானார். அதன் பிறகு அவரது இளைய சகோதரர் கோபிசந்த் இந்துஜா (85) குழுமத் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்துஜா குழுமம் பல துறைகளில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியது. இங்கிலாந்து மற்றும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அவர் மற்றும் அவரது குடும்பம் தொடர்ந்து இடம்பெற்று வந்தனர்.
சமீபத்தில் கோபிசந்த் இந்துஜாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று மறைந்தார்.
இந்த தகவலை உறுதிப்படுத்திய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராமி ரங்கர் தனது இரங்கல் செய்தியில், “நம் அன்புத் தோழர் ஜி.பி.இந்துஜாவின் மறைவு மிகுந்த கவலையைக் கொடுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி பெறட்டும். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்