“பிளாட் பிட்சில் நாங்கள்தான் சாம்பியன்கள்” – இங்கிலாந்து அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட மெக்கல்லம்

Date:

“பிளாட் பிட்சில் நாங்கள்தான் சாம்பியன்கள்” – இங்கிலாந்து அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட மெக்கல்லம்

வெளிநாட்டு சூழ்நிலைகளில் இங்கிலாந்து அணி இன்னும் தங்களை தகுந்த விதத்தில் தயாரிப்பதில் பின்தங்கியுள்ளது. அதனால் அங்கு அவர்கள் தொடர்ந்து போராட வேண்டியே வருகிறது. ஆனால் பந்துவீச்சாளர் friendly–யான ஃபிளாட் பிட்ச் கிடைத்தால் நாங்கள் சிறந்த அணி என்று இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் உள்நாட்டிலே தோல்விகளால் அவமானப்பட வேண்டியிருந்த இங்கிலாந்து அணி, மெக்கல்லம்–பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் ‘பாஸ்பால்’ தாக்குதல் பாணி மூலம் மீண்டெழுந்தது. இருந்தாலும், ஃபிளாட் பிட்சில் உதவி இருந்தபோதும் கடந்த ஆஷஸ் தொடரில் தொடரை 2-2 என சமமாக்கியது மட்டுமே.

இதேபோல சமீபத்திய இந்தியா தொடரிலும் ஃபிளாட் பிட்ச் திட்டம் பயனிக்காமல் அந்த தொடரும் சமையாக முடிந்தது. உண்மையில் கவுதம் கம்பீர்–கில் கூட்டணியின் தவறான அணித் தேர்வு இல்லையெனில் இந்தியா தொடரை வென்றிருக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது.

இதே தாக்குதல் பாணி ஒருநாள் போட்டிகளிலும் கைகொடுக்காமல், இங்கிலாந்து தற்போது ஓடிஐ வரிசையில் 8வது இடத்திற்கு சரிந்துள்ளது. வரும் உலகக்கோப்பைக்குள் இன்னும் 19 போட்டிகள் உள்ளன. இதில் சிறப்பாக விளையாடினால் நேரடி தகுதி கிடைக்கும்; இல்லையெனில் தகுதிச்சுற்று ஆட வேண்டிய நிலை.

நியூஸிலாந்துக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் மூன்றும் 50 ஓவர்கள் முடிக்க முடியாமல் 0-3 என வெள்ளைத் துடைப்பு அனுபவித்துள்ளனர். கடந்த 7 ஒருநாள் தொடர்களில் ஆறில் இங்கிலாந்து தோற்றுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரை முன்னிட்டு மெக்கல்லம் கூறியது:

“சாக்கு சொல்ல இடமே இல்லை. நாங்கள் நல்ல தயாரிப்புடன் இங்கே வந்துள்ளோம். ஃபிளாட் பிட்ச் என்றால் நாங்கள் மிகச் சிறந்த அணியாக விளங்குவோம். ஆனால் ஸ்பின் பிட்ச் அல்லது சீம், ஸ்விங் ஆதரவு இருந்தால் நாங்கள் சிரமப்படுகிறோம். அதற்கு ஏற்ப மாறிக்கொள்ள முடியாமல் இருப்பதே பிரச்சனை. ஒருநாள் கிரிக்கெட் குறித்து எனக்கு அதிக கவலை. ஆனால் டெஸ்ட், குறிப்பாக ஆஷஸ் தொடருக்கு நாங்கள் தெளிவான திட்டத்துடன் வந்திருக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்

ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம் வட...

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம்

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம் செங்கல்பட்டு மாவட்டம்...

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம்

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம் தூத்துக்குடி...

பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் பதிவு – மாணவர்களிடையே பெரும் வரவேற்பு

பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் பதிவு – மாணவர்களிடையே...