வாக்காளர்களை நோக்கி திட்டமிட்டு எஸ்ஐஆர் நடைமுறை கொண்டுவரப்படுகிறது: எம்.பி. ஜோதிமணி
கரூர் எம்.பி. ஜோதிமணி கூறுகையில்:
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திணிக்கப்படுகின்றது. இதை “இந்தியா” கூட்டணி கண்டிக்கிறது.
முன்பெல்லாம் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்குவது, புதிய பெயர்களை சேர்ப்பது போன்ற சாதாரண திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது வழங்கப்பட்ட புதிய படிவத்தில் 2002 ஆண்டிலிருந்த வாக்காளர் விவரங்கள், உறவினர் விவரங்கள், அடையாள எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் கேட்கப்படுகின்றன.
2002-ல் இருந்த உறவினர்கள் இப்போது உயிருடன் இல்லையெனில் அவர்களின் இறப்பு சான்றிதழை கூட சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பலரிடம் அந்தச் சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்த படிவங்களை முழுமையாக நிரப்ப முடியாவிட்டால் வாக்காளர்களை நீக்கப்படும் அபாயம் உள்ளது.
பிஹாரில் இந்த நடைமுறை மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனை தேர்தல் ஆணையம் செய்ய கூடாது; குடியுரிமை சரிபார்ப்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் செயல்படுத்தப்படுகிறது; அதனால் இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டம் நடத்தியதாகவும் தேர்தல் ஆணையம் பாஜகக்காக செயல்படுகிறது என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.