அஜித் நடித்துவரும் புதிய படங்களின் தகவல்!
அஜித் குமார் மற்றும் ‘எஃப்.ஐ.ஆர்’ பட இயக்குநர் மனு ஆனந்த் இணைந்து பணியாற்றும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
தற்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளன. ஜனவரி இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை மனு ஆனந்த் இயக்கவுள்ளார். கவுதம் மேனன் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த், ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும் இன்னும் வெளியாகாத ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களை இயக்கியவர். ‘என்னை அறிந்தால்’ படக்குழுவில் இருந்தபோது அஜித்துடன் நட்பு உருவானது என கூறப்படுகிறது.
இந்த நட்பின் அடிப்படையில் இருவரும் இணைந்து படைப்பதை தீர்மானித்துள்ளனர். இப்படத்தை யார் தயாரிக்கிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும். தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு அஜித் – மனு ஆனந்த் கூட்டணி படப்பணிகள் துவங்க உள்ளன.