மருத்துவமனையில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் டிஸ்சார்ஜ்
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் பீல்டிங் செய்யும் போது இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் ஐயர் காயமடைந்தார்.
காயத்திற்கு பிந்தைய ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் உடல்நிலை ஸ்திரமாகிய அவர், தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது