வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: திட்டமிட்ட தேதியிலேயே ‘டாக்சிக்’ வெளியீடு
யாஷ் நடிப்பில் கீத்து மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்சிக்’ திரைப்படம், வெளியீட்டு திகதி மாற்றப்படும் என்ற வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் 19, 2026 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் காரணமாக வெளியீடு மாற்றப்படலாம் என செய்திகள் பரவின. இதை படக்குழு முழுமையாக மறுத்துள்ளது.
தற்போது ‘டாக்சிக்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி மாதத்தில் முழு அளவிலான பிரசாரப் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கே.வி.என் அறிவித்துள்ளது.
இன்னும் 140 நாட்களில் படம் வெளியாகும் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.