அக்டோபரில் சென்னை மெட்ரோ பயன்படுத்தியோர் — 93.27 லட்சம்
சென்னையில் தற்போது 54 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக மூன்று லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 93,27,746 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பேர் பயணம் செய்திருந்த நிலையில், அக்டோபரில் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி போன்ற தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால் இந்தக் குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 17-ஆம் தேதி ஒரே நாளில் 4,02,010 பயணிகள் பயணம் செய்தது அந்த மாதத்தில் அதிகபட்சமாகும்.
அட்டைப்பயன்பாட்டில்:
- சிங்கார சென்னை அட்டை — 47,59,171 பயணிகள்
- பயண அட்டை — 77,236 பயணிகள்
- QR டிக்கெட் — 44,91,339 பயணிகள்