நவம்பர் 5-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வருகிற நவம்பர் 5-ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 05.11.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னணியில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.