பேட்மிண்டன் தங்கப்பதக்கம்: தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் பேட்மிண்டன் வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு, ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சீனாவில் அக்டோபர் 21 முதல் 26 வரை நடைபெற்ற ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவிற்கான வரலாற்றுச் சாதனையை தீக்ஷா படைத்தார். சர்வதேச நிலை மேடையில் இந்தியா முதல் முறையாக இப்பிரிவில் தங்கம் கைவரப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியை பாராட்டும் வகையில், சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தீக்ஷாவை வாழ்த்தி, ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை காசோலையை வழங்கினார்.
நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.