ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையம் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
தேர்வர்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் பணியின் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு மற்றும் மேல்முறையீடு மனுக்களை ஆன்லைனில் பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் https://rtionline.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆர்டிஐ மனுக்களையும் மேல்முறையீட்டு மனுக்களையும் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். எனவே இத்தொடக்கம் காரணமாக, மனுக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை; தபால் அனுப்புவதை தவிர்க்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.