தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஐஏஎஸ் பதவி உயர்வு
தமிழக மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 5 உயரதிகாரிகளுக்கு ஐஏஎஸ் பதவி அளித்து மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் சார்பு செயலர் பூபீந்தர் பாய் சிங் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு குடிமையியல் சேவை அதிகாரிகள் எஸ். கவிதா, சி. முத்துக்குமரன், பி. எஸ். லீலா அலெக்ஸ், எம். வீரப்பன், ஆர். ரேவதி ஆகியோர் குடியரசுத் தலைவர் கட்டளையின்படி இந்திய நிர்வாக சேவையில் (IAS) இணைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றுள்ள எஸ். கவிதா தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளராகவும், சி. முத்துக்குமரன் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணை இயக்குநராகவும், பி.எஸ். லீலா அலெக்ஸ் சென்னை சிப்காட் பொது மேலாளராகவும், எம். வீரப்பன் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும், ஆர். ரேவதி கங்கைகொண்டான் சிப்காட் தொகுதியில் நில எடுப்பு வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்கள்.