தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்த வந்தார். அப்போது நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள், “மரியாதை செலுத்திவிட்டு விரைவில் வெளியேறவும்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
விவாதத்தின் போது கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், நினைவிட நிர்வாகியான அழகுராஜாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த சூழல் பதற்றமாக மாறியது.
பின்னர், நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, தேவர் சிலை அருகே அமர்ந்து ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா செய்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரை சமாதானப்படுத்தினார்.