சக்தித் திருமகன்’ கதை திருட்டு குற்றச்சாட்டுக்கு அருண்பிரபு பதில்

Date:

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு குற்றச்சாட்டுக்கு அருண்பிரபு பதில்

விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் மீது எழுந்துள்ள கதை திருட்டு குற்றச்சாட்டை இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் மறுத்துள்ளார்.

செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம், அக்டோபர் 24 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆனது. வெளியான சில நாட்களில் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்த படத்தின் கதை, தானே எழுதி காப்புரிமை பெற்றிருந்த ‘தலைவன்’ படத்திலிருந்து எடுத்ததாக எழுத்தாளர் சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். அவர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டு பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறின.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அருண்பிரபு, “இது தவறான பழி. பல வருடங்களாக நான் எழுதிச் செதுக்கிய கதை. நன்றி. வணக்கம்” என்று பதிவு வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் சுபாஷ் சுந்தர் அடுத்ததாக எவ்வாறு செயல்படுகிறார் என்பது மீடியா மற்றும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்! பொங்கல் தொடர் விடுமுறையை...

திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி

“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு,...

ஈரானில் உச்சகட்ட மனித உரிமை மீறல் – உலகை உலுக்கிய கொடூர இனப் படுகொலை

ஈரானில் உச்சகட்ட மனித உரிமை மீறல் – உலகை உலுக்கிய கொடூர...

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக் குரல்

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக்...