விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் மீது எழுந்துள்ள கதை திருட்டு குற்றச்சாட்டை இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் மறுத்துள்ளார்.
செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம், அக்டோபர் 24 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆனது. வெளியான சில நாட்களில் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த படத்தின் கதை, தானே எழுதி காப்புரிமை பெற்றிருந்த ‘தலைவன்’ படத்திலிருந்து எடுத்ததாக எழுத்தாளர் சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். அவர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டு பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறின.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அருண்பிரபு, “இது தவறான பழி. பல வருடங்களாக நான் எழுதிச் செதுக்கிய கதை. நன்றி. வணக்கம்” என்று பதிவு வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் சுபாஷ் சுந்தர் அடுத்ததாக எவ்வாறு செயல்படுகிறார் என்பது மீடியா மற்றும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.