சிறுநீரக திருட்டு வழக்கில் மூவர் கைது; உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டுமென பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது அரசு வழக்கறிஞர், “இந்த வழக்கில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கிடையில், மனுதாரர் தரப்பில் “சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) நகலை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, “தேவைப்படும் பட்சத்தில் FIR நகலை மனுதாரருக்கு வழங்க தயாராக உள்ளோம்” என்றது. இது குறித்து நீதிபதிகள், “பொதுநல வழக்கில் FIR நகல் தேவைப்படாது” என்று குறிப்பிட்டனர்.
விசாரணையை முடித்த நீதிமன்றம், மனுவை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.