மருதமலை கோயில் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா — சமூக வலைதளங்களில் வைரல்!
கோவை மருதமலை முருகன் கோயிலின் மலைப்பாதையில் காட்டு யானைகள் கூட்டமாக நடமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள பகுதிகளில் உணவு தேடி காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்புறங்களுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மக்களால் “ரோலக்ஸ்” என அழைக்கப்பட்ட யானை பிடிபட்ட நிலையில், தற்போது “ஒற்றைக்கொம்பன்” மற்றும் “வேட்டையன்” எனப்படும் யானைகள் மீண்டும் ஊருக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை மருதமலை கோயிலின் மலைச்சாலையில், மூன்று குட்டிகளுடன் மூன்று காட்டு யானைகள் அமைதியாக நடைபயிலும் காட்சி கேமராவில் பதிவாகியது. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்றன.
அதேநேரத்தில், கோயிலில் சூரசம்ஹாரம் விழா நடைபெற்றிருந்ததால், வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையாக மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.