“அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000” – மதுரையில் ராஜன் செல்லப்பா அதிரடி வாக்குறுதி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா, பாரப்பத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான கோப்பில்தான் எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்திடுவார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலவச பிரிட்ஜ் வழங்கும் திட்டம் வெறும் கூப்பனாக மட்டும் நின்றுவிடாமல், நேரடியாக மக்களைச் சென்றடைவதை அதிமுக உறுதி செய்யும் என வாக்குறுதி அளித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், வரும் தேர்தலில் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.




