அவிநாசியை பசுமைப் பகுதியாக மாற்றுவோம்: தெலுங்கு மொழியில் பேசி எல்.முருகன் வாக்கு சேகரிப்பு!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வடுகபாளையம், பிச்சாண்டம் பாளையம், காரைக்குட்டை மற்றும் புஞ்சைதாமரைகுளம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது உரையாற்றிய எல்.முருகன், நீண்ட கால கோரிக்கையான அவிநாசி – அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும், இதன் மூலம் அவிநாசி பகுதி முழுவதும் பசுமையான இடமாக மாற்றப்படும் என்றும் உறுதி அளித்தார். குறிப்பாக, இப்பகுதிகளில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிப்பதால், அவர்களின் மனங்களை வெல்லும் வகையில் எல்.முருகன் தெலுங்கு மொழியில் சகஜமாக உரையாடி வாக்கு சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.




