புதுச்சேரி, கேரளம், அசாம்: தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9, வியாழக்கிழமை அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-திமுக கூட்டணித் தலைவர்கள் இறுதிக்கட்டமாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம் மற்றும் 126 தொகுதிகளைக் கொண்ட அசாமிலும் இன்று மாலை பிரசாரம் முடிவுக்கு வந்தது. பிரசாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து, வெளியூர் நபர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளைத் தயார் செய்யும் பணிகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வரும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.




