தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் இளம் முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார். அதேபோல், தருமபுரி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான பென்னாகரத்தில் ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டியிடுகிறார்.
முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் விவரம்:
சென்னையின் முக்கியத் தொகுதியான வேளச்சேரியில் அசான் மௌலானா போட்டியிடுகிறார். மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரியில் டாக்டர் ஏ. செல்லகுமார், ஈரோடு (கிழக்கு) தொகுதியில் கோபிநாத் பழனியப்பன், மற்றும் உதகமண்டலத்தில் பி. ராமச்சந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதியில் கே.பி. சூர்ய பிரகாஷ் மற்றும் சிங்காநல்லூரில் வி. ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
தென் தமிழகத்தில், காரைக்குடியில் எஸ். மாங்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் எஸ். ஊர்வசி அமிர்தராஜ், மற்றும் நாங்குநேரியில் ரூபி மனோகரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சலில் டாக்டர் தாரகை குத்பர்ட், விளவங்கோட்டில் டி.டி. பிரவீன், மற்றும் கிள்ளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மயிலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகமது, சிவகாசியில் கணேசன் அசோகன், மற்றும் அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை உள்ளிட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தப் பட்டியல் காங்கிரஸ் தொண்டர்களிடையே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
பொன்னேரி தனி – துரை சந்திரசேகர்
வேளச்சேரி – அசான் மௌலானா
ஸ்ரீபெரும்புதூர் தனி – கே.செல்வப்பெருந்தகை
சோளிங்கர் – ஏ.எம். முனிரத்தினம்
ஊத்தங்கரை தனி – ஆர்.குப்பு சாமி
கிருஷ்ணகிரி – டாக்டர். ஏ. செல்ல குமார்
பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன்
ஆத்தூர் தனி – எஸ்.கே.அர்த்தனாரி
ஈரோடு (கிழக்கு) *- கோபிநாத் பழனியப்பன்
உதகமண்டலம் – பி.ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம் – கே.பி. சூர்ய பிரகாஷ்
சிங்காநல்லூர் – V. ஸ்ரீநிதி நாயுடு
துறையூர் தனி – எம்.விச்சு லெனின் பிரசாத்
கடலூர் – ஏ.எஸ். சந்திரசேகரன்
மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது
அறந்தாங்கி -டி.ராம சந்திரன்
காரைக்குடி – எஸ்.மாங்குடி
உசிலம்பட்டி – டி.சரவண குமார்
சிவகாசி – கணேசன் அசோகன்
திருவாடானை – ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம் – எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில் – எஸ்சி சங்கை கணேசன்
அம்பாசமுத்திரம் – வி.பி. துரை
நாங்குநேரி – ரூபி மனோகரன்
குளச்சல் – டாக்டர் தாரகை குத்பர்ட்
விளவங்கோடு – டி.டி.பிரவீன்
கிள்ளியூர் – . எஸ். ராஜேஷ் குமார்





