திமுக ஆட்சியில் 18,000 போக்சோ வழக்குகள்: எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!
தருமபுரி:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். தருமபுரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், திமுக பதவியேற்றது முதல் தற்போது வரை தமிழகத்தில் சுமார் 18,000 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இத்தகைய குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், கடன் வாங்குவதிலும் ஊழலிலும் மட்டுமே திமுக அரசு முதலிடம் பிடித்துள்ளதாக விமர்சித்த அவர், அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிச்சயமாகக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.




