திமுக ஆட்சியில் மக்கள் பணம் கொள்ளை: முன்னாள் அமைச்சர் தங்கமணி கடும் விமர்சனம்
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தது மட்டுமே அந்த அரசின் சாதனையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான அவர், அங்குள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாக அவர் மிகுந்த வேதனை தெரிவித்தார்.





