புதுச்சேரியில் எளிமை: இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இக்கட்சி, இத்தொகுதியில் ‘தர்பூசணி’ சின்னத்தில் களம் காண்கிறது.
மிகப்பெரும் தொழிலதிபரான ஜோஸ் சார்லஸ் மார்டின், எவ்வித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் வலம் வந்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது, வழியில் நின்றிருந்த வயதான தம்பதியினரின் காலில் விழுந்து அவர் ஆசிபெற்றது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு பெரும் தொழிலதிபர் இவ்வளவு எளிமையாகச் சாமானிய மக்களை அணுகியது காமராஜர் நகர் தொகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




