தமிழக சட்டப்பேரவை தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அக்கட்சியின் மாநிலத் தேர்வுக்குழு அறிவித்துள்ள இந்தப் பட்டியலில், முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பழனி தொகுதியில் என். பாண்டி, கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் எம். சின்னதுரை, பத்மநாபபுரம் தொகுதியில் ஆர். செல்லசுவாமி, திருவொற்றியூர் தொகுதியில் எல். சுந்தரராஜன் மற்றும் கீழ்வேளூர் தொகுதியில் டி. லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளதால், அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.




