திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அரசு மீது தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டு!
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் பிரச்சினையை திமுக திட்டமிட்டுப் பெரிதாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தவெக தலைவர் விஜய் கண்டிப்பாகத் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், விஜய்யின் பிரசாரத்தின் போது போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மைக் மற்றும் ஸ்பீக்கர் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக காவல்துறை திமுக அரசின் கைக்கூலியாகச் செயல்பட்டு வருவதாக அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இச்சம்பவம் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




