தமிழக தேர்தல் களம்: ஏப்ரல் 3-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி – மயிலாப்பூரில் ரோடு ஷோ!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார்.
வரும் ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரியில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே சென்னை வரும் அவர், ஏப்ரல் 4ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்து பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ (Road Show) மூலம் வீதி வீதியாகச் சென்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பின் பிரதமர் மோடி முதல் முறையாகத் தமிழகம் வருவதால், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.




