கோபி அருகே அதிமுக வேட்பாளர் பிரபு தீவிர பிரசாரம்: கோயிலில் தரிசனம் செய்து வாக்கு சேகரிப்பு!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அதிமுக வேட்பாளர் பிரபு தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்கினார். கோயில் வளாகத்தில் இருந்த பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி முதற்கட்ட பிரசாரத்தை ஆரம்பித்த அவர், அதனைத் தொடர்ந்து கச்சேரி மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, பொதுவழியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படங்களை அகற்றுமாறு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இருப்பினும், தடையைத் தாண்டி வேட்பாளர் பிரபு தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.







