தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு – இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 27) தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170, ஒரு கிலோ ரூ.1,70,000 என நிலைத்திருக்கிறது.
தங்கத்தின் மீது முதலீடு குறைந்ததன் விளைவாக விலை சரிவடைந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நகை வாங்குவோருக்கு சிறு நிம்மதி ஏற்பட்டுள்ளது.