நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து – ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவுக்கு சென்ற சொகுசு இரட்டைஅடுக்கு பேருந்தில் திடீரென தீப்பிடித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்ரா–லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் ரேவ்ரி சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பேருந்தில் இருந்த 70 பயணிகள் அனைவரும் உயிர்த் தப்பினர்.
தீ டயரில் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தவுடன் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனே வெளியேற்றியதால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். பின்னர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.