லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், கிரேன் உதவியுடன் அருங்காட்சியகத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள், மன்னர் நெப்போலியன் காலத்தைய கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகளின் நகைகள் உள்ளிட்ட 8 விலைமதிப்புள்ள பொருட்களை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பாரிஸ் சிறப்பு படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.