முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை மாணவர் திருவிழாவாகக் கொண்டாட பாஜக வலியுறுத்தல்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளான தேவர் ஜெயந்தியை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாகக் கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர்” என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை, தேச ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதை மாணவர்களுக்கு எடுத்துக்கூற அரசு முனைப்புக் காட்ட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்களின் தியாகமும் சிந்தனையும் மாணவர்களிடம் பரவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனால், வரும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை ‘ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம்’ என அறிவித்து, மாணவர் திருவிழாவாகக் கொண்டாட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது