இணையவழி மோசடிகளைத் தடுக்கும் விழிப்புணர்வு குறும்படம் – சைபர் க்ரைம் போலீஸாரின் முயற்சி
சமீப காலங்களில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதையடுத்து, பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் “குறைந்த முதலீட்டில் இரட்டிப்பு லாபம்” கிடைக்கும் என கூறி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலர் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண், “இணையவழி மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற எண் வழியாக புகார் அளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in இணையதளத்தில் தகவல் வழங்கலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இப்படியான பங்குச் சந்தை முதலீட்டு மோசடிகளில் யாரும் சிக்காதிருக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில், சைபர் க்ரைம் பிரிவு வெளியிட்டுள்ள குறும்படத்தில் திரைப்பட நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார்.
அந்த வீடியோவில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நம்ப வைக்கும் மோசடிக் குழுக்களின் சதிகளை விளக்கி, அதில் சிக்கி பலர் கடனில் சிக்கி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதை உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளனர்.
இந்த குறும்படத்தின் மூலம், பொய்யான தகவல்களை நம்பாதீர், எச்சரிக்கையுடன் இருங்கள் என்ற செய்தியை போலீஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்