கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் விதிகள் – விரிவான விளக்கம்
டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில், ஆட்டம் டையாக (இரு அணிகளும் சம ரன்கள் எடுத்தால்) முடிவடைந்தால், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க “சூப்பர் ஓவர்” நடத்தப்படும்.
சூப்பர் ஓவரின் நடைமுறை:
- இரண்டு அணிகளும் தலா ஒரு ஓவருக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபடுகின்றன.
- பேட்டிங் செய்யும் அணிக்கு மூன்று பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படும், ஆனால் இரண்டு விக்கெட்கள் விழுந்தவுடன் அந்த இன்னிங்ஸ் முடிந்ததாக கருதப்படும்.
- கன்கஷன் மாற்ற வீரர் இருந்தால், அவரும் பேட் செய்யலாம்.
டிஆர்எஸ் (DRS):
- ஒவ்வொரு அணிக்கும் ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படும்.
- அது தவறாக இருந்தால் மீண்டும் அதை பயன்படுத்த முடியாது.
வெற்றியாளர் தீர்மானம்:
- இரண்டு அணிகளும் விளையாடியபின் அதிக ரன்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
- சூப்பர் ஓவரும் டையாக முடிந்தால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும்.
நேரம் மற்றும் மழைச் சூழ்நிலை:
- சூப்பர் ஓவர்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
- அவ்வளவுக்குள் முடிக்க முடியாவிட்டால் 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
- இதற்குப் பிறகும் ஆட்டம் முடிக்க முடியாவிட்டால், டை என அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
- மழை அல்லது வானிலை காரணமாக சூப்பர் ஓவரை நடத்த முடியாவிட்டாலும் இதே விதி பின்பற்றப்படும்.
நாக்-அவுட் சுற்றுகள்:
- சூப்பர் ஓவர் நடத்த முடியாதபட்சத்தில், அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெறும்.
- புள்ளிகள் சமமெனில் நிகர ரன் ரேட் (NRR) பார்க்கப்படும்.
- இதிலும் சமமெனில் அபராதங்கள், எச்சரிக்கைகள், இடைநீக்கங்கள் ஆகியவை கூட கணக்கில் கொள்ளப்படும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை:
- முக்கிய ஆட்டத்தில் இரண்டாவது பேட் செய்த அணி, சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்யும்.
- இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்த வேண்டிய நிலை வந்தால், முதல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அணி தான் முதலில் வரும்.
- ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமான பந்தை (ball) பயன்படுத்தலாம்.
மறுபடியும் விளையாடும் வீரர்கள்:
- முதல் சூப்பர் ஓவரில் அவுட் ஆன பேட்ஸ்மேன்கள், அடுத்த சூப்பர் ஓவரில் பேட் செய்ய முடியாது, ஆனால் மூன்றாவது ஓவரில் மீண்டும் பேட் செய்யலாம்.
- அதேபோல், ஒரு சூப்பர் ஓவரில் பந்து வீசிய பந்துவீச்சாளர், அடுத்த சூப்பர் ஓவரில் பந்து வீச முடியாது.