தமிழகத் தேர்தல் அறிக்கைக்கான குழுவை விரைவில் அமைக்கிறது பாஜக
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை (Manifesto) தயாரிப்பு பணிகள் தீவிரமாக தொடங்க உள்ளன.
தமிழகத்துக்கான பொறுப்பாளராக கட்சித் தலைமையால் பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை உருவாக்க மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைமை விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் தமிழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்களும் இடம்பெற உள்ளனர். வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் தொகுதி அடிப்படையிலான பிரச்சினைகள், மாநிலத்தின் முக்கிய தேவைகள், மக்களை ஈர்க்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய தலைமை இந்தக் குழுவின் பெயர்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.