நெல் கொள்முதலில் திமுக அரசு சாதனை இல்லை, “கொடுமை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Date:

நெல் கொள்முதலில் திமுக அரசு சாதனை இல்லை, “கொடுமை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

நெல் கொள்முதலில் திமுக அரசு சாதனை படைத்ததாக கூறுவது தவறானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“நெல் கொள்முதல் சாதனை அல்ல — வேதனை. கடந்த 20 நாட்களாக டெல்டா விவசாயிகள் கண்ணீரில் மிதக்கின்றனர். அவர்களின் வேதனையை தங்களின் சாதனை எனக் கூறும் திமுக அரசு கண்டிக்கத்தக்கது,”

என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

  • திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் 1.70 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. ஆனால் அதேகாலத்தில் மாநிலத்தில் 4.80 கோடி டன் நெல் விளைவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் பொருள், திமுக அரசு மொத்த உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வாங்கியுள்ளது.
  • 2023–24 ஆம் ஆண்டில் இந்திய அளவில் கொள்முதல் செய்யப்பட்ட 5,245 கோடி டன் நெலில்,
    • பஞ்சாப் – 23.62%,
    • தெலங்கானா – 12.15%,
    • சத்தீஸ்கர் – 15.80%,
    • ஒடிசா – 9.17%,
    • ஆனால் தமிழ்நாடு – வெறும் 4.52% பங்கு மட்டுமே பெற்றுள்ளது.

அன்புமணி மேலும் கூறியுள்ளார்:

“ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 தருவதாக பெருமைபடுகிறது திமுக அரசு. ஆனால் அதில் ரூ.2,369 மத்திய அரசின் தொகை, மாநில அரசு வழங்குவது வெறும் ரூ.131 ஊக்கத்தொகை தான். ஒடிசாவில் ரூ.3,169, தெலங்கானா, ஆந்திராவில் ரூ.2,869 வழங்கப்படுகிறது.”

அவர் மேலும் கடுமையாகக் கூறினார்:

“காவிரி பாசன மாவட்டங்களில் மழையில் நெல் நாசமாகி விவசாயிகள் துயரம் அனுபவிக்கின்றனர். ஆனால் திமுக அரசு புள்ளிவிவரங்களை காட்டி தப்பிக்க முயல்கிறது. கடந்த 20 நாட்களாக கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை விடாது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்ப்புக்கு கிடைக்காத அமைதிக்கான நோபல் பரிசு – வெள்ளை மாளிகை அதிருப்தி

ட்ரம்ப்புக்கு கிடைக்காத அமைதிக்கான நோபல் பரிசு – வெள்ளை மாளிகை அதிருப்தி 2025...

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: பாஜக–அதிமுக கணக்கு, திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: பாஜக–அதிமுக கணக்கு, திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை மக்களின்...

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் – தமிழக அரசு பெருமிதம்

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல்...

பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 5-வது ஆப்பிரிக்க அணி – கானா

பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 5-வது ஆப்பிரிக்க அணி –...