புதுக்கோட்டை ரவுடி கொலை வழக்கு: 3 பேர் அதிரடி கைது – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக, ரவுடி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று மதுக்கடையில் நவீன் மற்றும் அய்யனார் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதையடுத்து, நவீன் தனது நண்பர் சுமனை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த சுமனை, ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. தகவலறிந்து வந்த போலீசார், பலியான சுமனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்போது 3 பேரைக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.