மானாமதுரை: போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த இளைஞரின் வன்முறை சிசிடிவி காட்சி வெளியீடு
மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞர், நள்ளிரவில் சிலரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆகாஷ், காவல்துறையினரின் விசாரணையில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக, ஆகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் காவல்துறைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள் வழக்கிற்குப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், ஆகாஷ் இருவரை மிகக் கொடூரமாக அரிவாளால் வெட்டி வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளன.